வேல் மாறல் பதிகம்

Vel Maaral Pathigam

ஓதும் முறை

மூல அடி

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்

மலை விருத்தன்

எனது உளத்தில் உறை கருத்தன்

மயில் நடத்து குகன் வேலே.

  1. வேலும் மயிலும் துணை — 6 முறை ஓதவும்.
  2. இந்த அடியை முதலில் 20 முறை ஓதவும்.

விநாயகர் வணக்கம் (கந்தர் அனுபூதி)

நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகத்

தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்

செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

முருகன் பெருமை (அலங்காரம்)

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

மயிலின் திறம் (கந்தர் அலங்காரம்)

தடம் கொற்ற வேள் மயிலே! இடர்தீரத் தனிவிடில் நீ

வடக்கில் கிரிக்கு அப்புறத்து நின்தோகையின் வட்டம் இட்டுக்

கடலுக்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகசக்ரத்

திடர்க்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே.

அடி 1

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகர் ஆகும்

மேலே

அடி 2

திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே

மேலே

அடி 3

சொலற்(கு) அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்(து) எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

மேலே

அடி 4

தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்

மேலே

அடி 5

பனைக்கை முக படக் கரட மதத்தவள கஜக் கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

மேலே

அடி 6

சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்(து)எயிறு கடித்து விழி விழித்(து) அலற மோதும்

மேலே

அடி 7

துதிக்கும் அடி யவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்(கு) ஓர் துணை ஆகும்

மேலே

அடி 8

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண வழைப்ப(து) என மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை(வு) ஆகும்

மேலே

அடி 9

பழுத்த மது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப் புலவன் இசைக்(கு) உருகி வரைக் குகையை இடித்து வழி காணும்

மேலே

அடி 10

திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை முளைத்த(து) என முகட்டின் இடை பறக்க அற விசைத்(து) அதிர ஓடும்

மேலே

அடி 11

சுடர்ப் பரிதி ஒளிப்ப நில(வு) ஒழுக்கு(ம்) மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்

மேலே

அடி 12

தனித்து வழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அரு(கு) அடுத்(து) இரவு பகற் துணைய(து) ஆகும்

மேலே

அடி 13

பசித்(து) அலகை முசித்(து) அழுது முறைப்படுதல் ஒழித்(து) அவுணர் உரத்(து) உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்

மேலே

அடி 14

திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது குடித்(து) உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளை யாடும்

மேலே

அடி 15

சுரர்க்கு(ம்) முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

மேலே

அடி 16

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும்

மேலே

அடி 17

சுரர்க்கு(ம்) முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

மேலே

அடி 18

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும்

மேலே

அடி 19

பசித்(து) அலகை முசித்(து) அழுது முறைப்படுதல் ஒழித்(து) அவுணர் உரத்(து) உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்

மேலே

அடி 20

திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது குடித்(து) உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளை யாடும்

மேலே

அடி 21

சுடர்ப் பரிதி ஒளிப்ப நில(வு) ஒழுக்கு(ம்) மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்

மேலே

அடி 22

தனித்து வழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அரு(கு) அடுத்(து) இரவு பகற் துணைய(து) ஆகும்

மேலே

அடி 23

பழுத்த மது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப் புலவன் இசைக்(கு) உருகி வரைக் குகையை இடித்து வழி காணும்

மேலே

அடி 24

திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை முளைத்த(து) என முகட்டின் இடை பறக்க அற விசைத்(து) அதிர ஓடும்

மேலே

அடி 25

துதிக்கும் அடி யவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்(கு) ஓர் துணை ஆகும்

மேலே

அடி 26

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண வழைப்ப(து) என மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை(வு) ஆகும்

மேலே

அடி 27

பனைக்கை முக படக் கரட மதத்தவள கஜக் கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

மேலே

அடி 28

சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்(து)எயிறு கடித்து விழி விழித்(து) அலற மோதும்

மேலே

அடி 29

சொலற்(கு) அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்(து) எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

மேலே

அடி 30

தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்

மேலே

அடி 31

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகர் ஆகும்

மேலே

அடி 32

திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே

மேலே

அடி 33

தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்

மேலே

அடி 34

சொலற்(கு) அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்(து) எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

மேலே

அடி 35

திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே

மேலே

அடி 36

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகர் ஆகும்

மேலே

அடி 37

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண வழைப்ப(து) என மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை(வு) ஆகும்

மேலே

அடி 38

துதிக்கும் அடி யவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்(கு) ஓர் துணை ஆகும்

மேலே

அடி 39

சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்(து)எயிறு கடித்து விழி விழித்(து) அலற மோதும்

மேலே

அடி 40

பனைக்கை முக படக் கரட மதத்தவள கஜக் கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

மேலே

அடி 41

தனித்து வழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அரு(கு) அடுத்(து) இரவு பகற் துணைய(து) ஆகும்

மேலே

அடி 42

சுடர்ப் பரிதி ஒளிப்ப நில(வு) ஒழுக்கு(ம்) மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்

மேலே

அடி 43

திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை முளைத்த(து) என முகட்டின் இடை பறக்க அற விசைத்(து) அதிர ஓடும்

மேலே

அடி 44

பழுத்த மது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப் புலவன் இசைக்(கு) உருகி வரைக் குகையை இடித்து வழி காணும்

மேலே

அடி 45

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும்

மேலே

அடி 46

சுரர்க்கு(ம்) முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

மேலே

அடி 47

திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது குடித்(து) உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளை யாடும்

மேலே

அடி 48

பசித்(து) அலகை முசித்(து) அழுது முறைப்படுதல் ஒழித்(து) அவுணர் உரத்(து) உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்

மேலே

அடி 49

திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது குடித்(து) உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளை யாடும்

மேலே

அடி 50

பசித்(து) அலகை முசித்(து) அழுது முறைப்படுதல் ஒழித்(து) அவுணர் உரத்(து) உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்

மேலே

அடி 51

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும்

மேலே

அடி 52

சுரர்க்கு(ம்) முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

மேலே

அடி 53

திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை முளைத்த(து) என முகட்டின் இடை பறக்க அற விசைத்(து) அதிர ஓடும்

மேலே

அடி 54

பழுத்த மது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப் புலவன் இசைக்(கு) உருகி வரைக் குகையை இடித்து வழி காணும்

மேலே

அடி 55

தனித்து வழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அரு(கு) அடுத்(து) இரவு பகற் துணைய(து) ஆகும்

மேலே

அடி 56

சுடர்ப் பரிதி ஒளிப்ப நில(வு) ஒழுக்கு(ம்) மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்

மேலே

அடி 57

சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்(து)எயிறு கடித்து விழி விழித்(து) அலற மோதும்

மேலே

அடி 58

பனைக்கை முக படக் கரட மதத்தவள கஜக் கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

மேலே

அடி 59

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண வழைப்ப(து) என மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளை(வு) ஆகும்

மேலே

அடி 60

துதிக்கும் அடி யவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்(கு) ஓர் துணை ஆகும்

மேலே

அடி 61

திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே

மேலே

அடி 62

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகர் ஆகும்

மேலே

அடி 63

தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்

மேலே

அடி 64

சொலற்(கு) அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்(து) எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

மேலே

நிறைவுப் பாடல்கள்

திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை

விருத்தன் எனது உளத்தில் உறை

கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.

(இந்த அடியை 20 முறை ஓதவும்)

தேர் அணி இட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில் வேல்

கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்த அரக்கர்

நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்

பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட

தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை.

வேலும் மயிலும் துணை

(6 முறை ஓதவும்)